ஹரியானா மாநிலத்தில் தேர்தலை கண்காணிக்க காங்கிரஸ் குழு அமைப்பு

By செய்திப்பிரிவு

சண்டிகர்: ஹரியானாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நிலவரத்தைக் கண்காணிக்க அம்மாநிலத்தில் காங்கிரஸ் குழு அமைத்துள்ளது.

இக்குழுவில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கட்சியின் பொருளாளர் அஜெய் மக்கான் மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது ஹரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அக்டோபர் 5-ம் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது. மீதமுள்ள 1 தொகுதி சிபிஐ(எம்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ள 28 பேருக்கு காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. அக்டோபர் 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE