புதுடெல்லி: விவசாயிகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40% லிருந்து 20% ஆக மோடி அரசு குறைத்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி வரியை நீக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஏற்றுமதி வரி நீக்கப்பட்டதன் மூலம், பாசுமதி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதுடன், பாசுமதி அரிசியின் தேவையும், ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உறுதி பூண்டுள்ள மோடி அரசு வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40% லிருந்து 20% ஆக குறைத்துள்ளது. ஏற்றுமதி வரி குறைப்பால் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைப்பதுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரிக்கும். அரசின் இந்த முடிவால், விவசாயிகள் மற்றும் வெங்காயம் சார்ந்த பிற துறைகளும் நேரடி பலன்களைப் பெறும்.
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 0% லிருந்து 20% ஆக உயர்த்தியுள்ளது. இறக்குமதி வரியை அதிகரிப்பது சோயாபீன் பயிரின் விலையை அதிகரிக்கும்; சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களை உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்க ஊக்குவிக்கும். இதன் மூலம் விவசாய சகோதர சகோதரிகளின் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். இந்த முடிவால், சோயா உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதியும் அதிகரிக்கும். சோயா தொடர்பான பிற துறைகளும் பயனடையும்.
» ‘வாழ்க்கை எளிதானதில்லை’ - ராகுலை மறைமுகமாக சாடிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
» “வளர்ச்சியடைந்த இந்தியாவை உறுதிப்படுத்த இந்தி தொடர்ந்து பங்களிக்கும்” - அமித் ஷா
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கான அடிப்படை வரியை 32.5% உயர்த்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு கடுகு, சூரியகாந்தி மற்றும் நிலக்கடலை பயிர்களின் சுத்திகரிப்பு எண்ணெய்க்கான தேவையை அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு இந்தப் பயிர்களுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், சிறு மற்றும் கிராமப்புறங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகரிப்பதால், அங்கு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். இத்தகைய முக்கியமான முடிவுகளுகு்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago