இருசக்கர வாகனத்தின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய நபர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இருசக்கர வாகனத்தின் பிறந்தநாளை ஒருவர் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நமது அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வாகனங்கள் மீது பலருக்கும் ஆர்வமும் ஈர்ப்பும் அதிகமாக இருக்கும். சிலர் தங்களின் வாகனங்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்துவதும் அவற்றை கொண்டாடுவதும் உண்டு. அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்துக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். மாலையிட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் முன் டயரில் கத்தியை கட்டிய அவர், ஹேண்டில்பாரை பிடித்து வாகனத்தை முன்னும் பின்னுமாக நகர்த்துகிறார். அதேநேரத்தில் டயருக்கு முன் ஒருவர் கையில் கேக்கை ஏந்தியவாறு நிற்க, டயரில் இருக்கும் இருக்கும் கத்தி மேலும் கீழுமாக சென்று கேக்கை வெட்டுகிறது. மேலும் பின்னணியில் பிறந்த நாள் பாடலும் ஒலித்துகொண்டாட்டத்தை இனிமையாக்குகிறது.

எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 2 லட்சம்முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து ரசித்த பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர், "மிகவும் புதுமையாக உள்ளது. எவ்வளவு சிந்தனையுள்ள நபர்" என்று பாராட்டியுள்ளார். மற்றொருவர் நகைச்சுவையாக, “அவர் முதலில் சைலன்சரை பயன்படுத்தி மெழுகுவர்த்தியை அணைத்திருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பாராட்டியும் நகைச்சுவையாகவும் பலர் தங்கள் கருத்துகளை பதிவிட ஒருவர், "எப்படி ஒருவரால் தனது பைக் பிறந்த நாளை மறக்க முடியும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்