உத்தராகண்ட் மாநிலத்தில் அதி கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்டில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங் களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உத்தராகண்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வானிலை ஆராய்ச்சி மையம் கணித்தது போலவே நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுமாறு மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். மலைப்பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள், பாலங்கள், மலைப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யும் வகையில் அதிகாரிகள் தயாராக இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை கன மழையால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்க நிவாரணப் பொருட்களை தயாராக வைத்திருக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். கனமழை பெய்து வரும் பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் (எஸ்டிஆர்எஃப்) தயாராக இருக்கும்படியும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE