தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு விசாகப்பட்டினம் பாயகராவு பேட்டா பகுதியில் பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டன. ரசிகர்கள் சிலர் மிகப்பெரிய பேனரை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது மேலே இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் பேனரில் இருந்த இரும்புக் கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில், நாகராஜு (28), பீமவரபு சிவா (31) ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து விசாகப்பட்டினம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago