திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: சுவாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருப்பு

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை கூட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையையொட்டி கூட்டம் அலைமோதியது. இதனால், ஒரு கட்டத்தில் பக்தர்கள் சுவாமியை தர்ம தரிசனம் முலம் தரிசிக்க சுமார் 52 மணி நேரம் கூட ஆனது. குறிப்பிட்ட நேர சர்வ தரிசன முறையையும் தேவஸ்தானம் ரத்து செய்தது. தற்போது பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டன. ஆயினும், விடுமுறை நாளான கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் திருமலையில் அலைமோதுகிறது. இதனையொட்டி, நேற்று ஏழுமலையானை சர்வ தரிசனம் மூலம் தரிசிக்க பக்தர்கள் 20 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். ரூ. 300 சிறப்பு தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும், மலையேறி திவ்ய தரிசனம் மூலம் சென்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்