க‌ன்னட திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறலை விசாரிக்க ஆணையம் தேவை: சித்தராமையாவுக்கு கோரிக்கை

By இரா.வினோத்


பெங்களூரு: கேரளாவில் பாலியல் அத்துமீறலை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஆணையம்போல கர்நாடகாவிலும் ஆணையம் அமைத்து க‌ன்னட திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்த வேண்டும் என நடிகர்கள் சுதீப், கிஷோர், சேத்தன் மற்றும் நடிகைகள் ரம்யா, சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே இயக்குநர் கவிதா லங்கேஷ் தலைமையிலான‌ கன்னட திரையுலக உரிமைக்கான அமைப்பு முதல்வர் சித்தராமையாவுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், ‘‘கன்னட திரையுலகிலும் நடிகைகள் பாலியல் ரீதியான அத்துமீறலுக்கு ஆளாகின்றனர். பெரிய நடிகைகள் மட்டுமல்லாமல் துணை நடிகைகள் சக கலைஞர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்.

பணி இடத்தில் அனைத்துபெண்களுக்கும் பாதுகாப்பானசூழலை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாலியல் ரீதியாக அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு நீதிவழங்க வலுவான ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற அல்லதுஉச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இந்த ஆணையத்தின் அறிக்கையை 3 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE