உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகபோர் நீடிக்கிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் அதிக அளவில்உயிர் சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட்டன. தற்போது ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் உக்ரைன், ரஷ்யாவுடன் போரிட்டு வருகிறது. ‘‘இது போருக்கான காலம் இல்லை. ரஷ்யா, உக்ரைன் போரைகைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று இருநாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடிபல முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கு சென்றபோது, புதினிடம் நேரிலும் இதுகுறித்து மோடி வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி கடந்த 23-ம் தேதி உக்ரைன் சென்றிருந்தபோது, ‘‘ரஷ்யா - உக்ரைன் மோதல் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் உள்ளது’’ என்றும் திட்டவட்டமாகதெரிவித்தார். போர் நடவடிக்கையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறும், இதில் உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர்மோடி உறுதிபட கூறினார். அப்போது, பிரதமருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் சென்றிருந்தனர்.

‘‘உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் ஊடுருவியதால், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை’’ என ரஷ்ய அதிபர் புதின் ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், ‘‘ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் உண்மையாக முயற்சி மேற்கொள்கின்றன. அந்த நாடுகள் இதில் நடுவர்களாக செயல்பட முடியும். துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் அமல்படுத்தப்படாத ஒப்பந்தங்கள், இனிமேல் நடக்க உள்ள அமைதி பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார். புதினின் இந்த கருத்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாதயார் என்பதை காட்டும் விதமாக உள்ளது. இதையடுத்து, புதினை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி,அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசிக்க, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அனுப்பி வைப்பதாக கூறினார்.

இதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதால், அஜித் தோவல் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளார். அவர் அமைதி பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையை தொடங்குவார் என கூறப்படுகிறது. உக்ரைன் தலைவர்களுடனும் அவர் ஆலோசனையில் ஈடுபடுவார் என தெரிகிறது. இந்தியாவின் தீவிர முயற்சியால் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதி திரும்பினால், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு மேலும் உயரும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இத்தாலி பிரதமர் நம்பிக்கை: இத்தாலியின் செர்னோப்பியோ நகரில் ஆம்ப்ரோசெட்டி கூட்டமைப்பின் கூட்டம் கடந்த 7-ம் தேதிநடந்தது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி கூறும்போது, ‘‘ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா, சீனா முக்கிய பங்காற்ற முடியும். அவசியம் முக்கிய பங்காற்ற வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்