வெள்ள ஆய்வின் போது திடீரென எதிரே வந்த ரயில்: மெய்க்காப்பாளர்களால் உயிர் தப்பிய சந்திரபாபு நாயுடு

By என். மகேஷ்குமார்

விஜயவாடா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் நேற்று வெள்ள ஆய்வு மேற்கொண்ட போதுஆற்றின் மேல் உள்ள தண்டவாளத்தின் அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே எதிர்பாராத விதமாக ரயில் வேகமாக வந்தது. உடனே அவரின் பாதுகாவலர்கள் சந்திரபாபுவுக்கு பாதுகாப்பு அரணாக நின்று அவரை காப்பாற்றினர். இதனால் அவர் வெறும் 3 அடி தூரஇடைவெளியில் உயிர் தப்பினார்.

ஆந்திர மாநிலத்தில் சில மாவட்டங்களை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. குறிப்பாகவிஜயவாடா நகரம் சீர் குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,000 ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. 250-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. 500-க்கும்மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 3.5 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பல நூறு கி.மீ வரை சாலைகள் அடித்து செல்லப்பட்டன. கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கின.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் புடமேரு, கொல்லேறு ஏரிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் புடமேரு ஏரியால் பாதிக்கப்பட்ட சிங்க் காலனி பகுதில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்தார். அரசு வழங்கும் நல திட்ட உதவிகள் வந்து சேர்ந்ததா ? என்றும் விசாரித்தார். பின்னர் அவர் மதுராநகர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் நடந்து சென்றவாறு, கீழேபாய்ந்தோடும் புடமேரு வெள்ளத்தை பார்வையிட்டார். அப்போது எதிரே எதிர்பாராத விதமாக வேகமாக ரயில் ஒன்று வந்தது. உடனே, சந்திரபாபு நாயுடுவைஅவரது மெய்க்காப்பாளர்கள் இழுத்து பிடித்துக் கொண்டனர். வெறும் 3 அடியில் எக்ஸ்பிரஸ் ரயில்அதிவேகமாக சென்றது. அதன் பின்னர் சிரித்து கொண்டே அவர் அங்கிருந்து புறப்பட்டார். சமீபத்தில் வெள்ள பாதிப்புபகுதிகளை ஆய்வு செய்து வரும்சந்திரபாபு நாயுடு, பாதுகாப்பு வளையத்தை மீறுவதாக மெய்க்காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE