இஸ்ரோ பற்றிய `தி இந்து’வின் புதிய நூல் வெளியீடு

By இரா.வினோத்


பெங்களூரு: 'தி இந்து' பதிப்பகத்தின் இஸ்ரோ: எக்ஸ் ப்ளோரிங் நியூ ஃபிரான்டியர்ஸ் டு தி மூன், தி சன் & பியோண்ட்' என்ற காபி டேபிள் புத்தகத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் வெளியிட்டார்.

'ஃப்ரண்ட்லைன்' இதழின் முன்னாள் அசோசியேட் எடிட்டர் டி.எஸ்.சுப்ரமணியன் தொகுத்த இந்த நூலில் இஸ்ரோவின் ஆரம்ப கால முயற்சிகளில் ஆரம்பித்து சந்திரயான் திட்டம்-1, 2 மற்றும் 3, ஆதித்யா எல்-1 மிஷன் வரை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி யுள்ளது. குறிப்பாக விண்வெளி துறையில் இந்தியா செய்த சாதனைகள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

மேலும் இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களின் வரலாறு, அந்த திட்டங்களின் இயக்குநர்களின் நேர்காணல்கள் மற்றும் அதன் கண்கவர் புகைப்படங்கள் உள்ளிட்ட நுட்பமான தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்நூலை வெளியிட்டு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர் பான தகவல்களும், அதன் பல்வேறு திட் டம் தொடர்பான தகவல்களும் இந் நூலில் இடம்பெற்றுள்ளன. 'தி இந்து' வெளியிட்ட இந்நூல் சிறந்த வரலாற்றுத் தொகுப்பாக உள்ளது. இதனை வெளியிடும்போது பல்வேறு பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன. இந்நூல் சந்திரயான் -3 திட்டத் தின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந் தாலும், ஒட்டுமொத்த இஸ்ரோ வின் வரலாறையும் உள்ளடக்கியுள்ளது. இந்த வகையில் இந்நூல் ஒரு நல்ல வரலாற்றுத் தொகுப்பாகும்" என்றார்.

'தி இந்து'வின் ஆசிரியர் சுரேஷ் நம்பத் கூறுகையில், "இந்த நூல்கள் இதழின் ஆவண காப்பகத்தில் இருந்து இஸ்ரோ குறித்த அனைத்து நேர்காணல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. 'தி இந்து' ஆரம்பம் முதல் இஸ் ரோவின் அனைத்து சாதனைகளையும் பதிவு செய்திருக்கிறது" என்றார். இந்த நிகழ்வில் 'தி இந்து'வின் விற்பனை பிரிவின் துணைத் தலைவர் ஸ்ரீதர் அர்னாலாவும் உரையாற்றினார். இந்த நூலை தொகுத்ததில் 'தி இந்து' நாளிதழின் முன்னாள் மூத்த துணை ஆசிரியர் கே.கிருபாநிதி, மூத்த துணை ஆசிரியர் ஆர்.கிருத்திகா ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE