திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரங்களை அதிரடிப்படை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 150 பேரை தேடி வருகின்றனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கரகம்பாடி என்ற இடத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு அதிரடிப்படை ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டர் விஜய நரசிம்முலு தலைமையிலான ஒரு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்திருந்தனர். அப்போது, இரவு 11.30 மணியளவில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் கொண்ட கடத்தல் கும்பல் ரூ.3 கோடி மதிப்புள்ள 145 செம்மரங்களை வெட்டி, ஒரு டிப்பர் லாரியில் கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அதிரடிப்படையினரைக் கண்ட அந்த கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது.. சுமார் 15 பேர் கொண்ட அதிரடிப்படையினர் அவர்களின் தாக்குதலை பொருட்படுத்தாது தொடர்ந்து முன்னோக்கி சென்றுள்ளனர். இதனால், கும்பல் செம்மரங்களை வனப்பகுதியிலேயே போட்டுவிட்டு தப்பி வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். அதன் பின்னர் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரங்களை அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாகி உள்ள கடத்தல் கும்பலை தொடர்ந்து தேடி வருவதாக அதிரடிப்படை ஐஜி காந்த ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
33 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago