எங்களுக்கு பிரதமரின் வாழ்த்து தேவையில்லை: ஆந்திர அமைச்சர் லோகேஷ் வருத்தம்

By என்.மகேஷ் குமார்

மாநில பிரிவினையால் நொந்து போயுள்ள எங்களுக்கு உங்கள் வாழ்த்து தேவையில்லை என ஆந்திர அமைச்சர் லோகேஷ் பிரதமர் மோடிக்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் பிரிந்து 4 ஆண்டுகள் ஆனதையொட்டி, தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆந்திர முதல்வரின் மகனும் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான லோகேஷ் நேற்று ட்விட்டரில், “மாநிலப் பிரிவினை முறைப்படி நடக்கவில்லை. இந்த விஷயத்தில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதற்காக மத்திய அரசு மீது மக்கள் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளனர். அத்துடன் நஷ்டத்தை சந்தித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், உங்களுடைய வாழ்த்து எங்களுக்கு வேண்டாம். இது மக்களை திருப்தி படுத்தாது. அதற்கு பதில், மாநிலப் பிரிவினை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட 19 அம்சங்களையும் அமல்படுத்துங்கள். மாநில சிறப்பு அந்தஸ்து என்பது 5 கோடி ஆந்திர மக்களின் உரிமை. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இத்துடன், பிரதமரின் வாழ்த்துக்கு அதிருப்தி தெரிவித்து பொதுமக்கள் சிலர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த கருத்துகளையும் அவர் இணைத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்