சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் மும்பையில் பேரணி

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலையை பிரதமர் மோடி கடந்தாண்டு டிச. 4-ம் திறந்து வைத்தார். இந்த சிலை கடந்த மாதம் 26-ல் உடைந்து விழுந்தது.

இந்நிலையில் சிவாஜி சிலை உடைந்த சம்பவத்துக்கு, ஆளும் மகாயுதி கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார் அணி) தலைவர் சரத்பவார், சிவ சேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆகியோர் பங்கேற்றனர். ஹுதாத்மா சவுக் முதல் கேட்வே ஆப் இந்தியா வரை இந்த பேரணி நடைபெற்து.

இந்நிகழ்ச்சியில் பேசிய சரத் பவார், ‘‘சிவாஜி சிலை உடைந்தது, தற்போதைய ஆட்சியில் நடைபெறும் ஊழலுக்கு எடுத்துக் காட்டு’’ என்றார். உத்தவ் தாக்கரேபேசுகையில், ‘‘ சில நாட்களுக்கு முன் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை மக்கள் பார்த்தனர். இது தொடர்பாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் சிவாஜி சிலை இடிந்தது பற்றி ஆளுநர் கண்டு கொள்ளவில்லை. பலத்தகாற்று காரணமாக சிலை விழுந்ததாக அவர்கள் கூறுகின்றனர். இது எப்படி சாத் தியம்?’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE