60,200 காவலர் இடங்களுக்கு உ.பி.யில் 3 லட்சம் பேர் போட்டி

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் போலீஸ் துறையில் காலியாகஉள்ள 60,200 பணியிடங்களைநிரப்ப தேர்வு நடத்தப்பட்டது.உத்தர பிரதேச போலீஸ் பணியாளர் தேர்வாணையம் இதற்கான தேர்வை கடந்த மாதம் 23-ம்தேதி முதல் 31-ம் தேதி வரை 5 நாட்கள் நடத்தியது.

இதற்காக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடைசி நாளில் மட்டும் 67 மாவட்டங்களில் 1,174 மையங்களில் போலீஸ் துறைக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்பட்டது. உ.பி. போலீஸ் துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக பிரம்மாண்டமாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்காக தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள், போலீஸ் தேர்வாணையம் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மாநில போலீஸ் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்துகளை தெரிவித்தார். தேர்வை அமைதியான முறையிலும் பாதுகாப்பாகவும் நடத்திமுடித்ததற்காக அவர் பாராட்டு தெரிவித்தார்.

முதல்வர் ஆதித்யநாத் கூறும் போது, ‘‘உ.பி. போலீஸ் துறையில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களில் 15 ஆயிரம் இடங்களில் பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார். முன்னதாக காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 17 மற்றும் 18-ம்தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது கேள்வித்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்