ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் இரும்பு தொழிற்சாலை அமைக்க அனுமதி கோரி, கடந்த 7 நாட்களாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.எம். ரமேஷ் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்திற்கு நேற்று திமுக எம்பி கனிமொழி நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் குறிப்பிட்டுள்ள மாநில சிறப்பு அந்தஸ்து உட்பட 19 அம்சங்களையும் அமல்படுத்துமாறு தெலுங்கு தேசம், மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், இதை மத்திய அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தினால், கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.
இந்நிலையில், கடந்த 7 நாட்களுக்கு முன், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.எம். ரமேஷ் மற்றும் பி.டெக் ரவி ஆகியோர், கடப்பாவில் இரும்பு தொழிற்சாலை அமைக்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி நேற்று இவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்ததோடு, அவர்களின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். தெலுங்கு தேசம் கட்சிக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago