அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா.வின் எதிர்காலம் பற்றிய உச்சிமாநாடு வரும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள அமெரிக்காவின் இந்திய-அமெரிக்க சமுதாய அமைப்பு (ஐஏசியு) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நியூயார்க் நகரில் செப்டம்பர்22-ம் தேதி ‘மோடி அன்ட் அமெரிக்கா : புரோகிரஸ் டுகெதர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதில் அமெரிக்காவின் 42 மாகாணங்களில் வசிக்கும் இந்தியர்கள் பங்கேற்பார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பங்கேற்க 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், ஜெயின், சீக்கியம் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் மற்றும் பல்வேறு மொழி பேசும் மக்கள் அடங்குவர். இதில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வர்த்தகம், அறிவியல், பொழுதுபோக்கு, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE