பாதுகாப்புத் துறை ரகசியம் கசிந்த வழக்கில் 7 மாநிலங்களில் 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை ரகசியங்கள் கசிந்தது தொடர்பான வழக்கில் 7 மாநிலங்களில் 16 இடங்களில் சோதனை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பினரின் (ஐஎஸ்ஐ) மோசடி மூலம், இந்திய கடற்படை தொடர்பான முக்கியமான தகவல் கசிந்ததாக தெரிவித்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 2021-ல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், 22 செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, குஜராத்,கர்நாடகா, கேரளா, தெலங்கானா, உத்தர பிரதேசம், பிஹார் மற்றும்ஹரியானா ஆகிய 7 மாநிலங்களில் 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டுஜூலை 19-ம் தேதி என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆகாஷ் சோலங்கி மற்றும் தப்பி ஓடிய பாகிஸ்தானைச் சேர்ந்த மீர் பலஜ் கான் ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதே வழக்கில் மன்மோகன் சுரேந்திர பாண்டா மற்றும் ஆல்வென் ஆகிய 2 பேருக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி துணை குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்தது. இதில் பாண்டா கைது செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த ஆல்வென் தலைமறைவாக உள்ளார்.

இந்த வழக்கில், அமான் சலிம்ஷேக் என்பவருக்கு எதிராக கடந்தமே மாதம் 2-வது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாகிஸ்தான் உளவுஅமைப்புடன் இணைந்து சதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்