மியா முஸ்லிம்கள் அசாமை கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில்

By செய்திப்பிரிவு

திஸ்பூர்: அசாமின் நாகவுன் மாவட்டம், திங் என்ற இடத்தில் கடந்த 22-ம்தேதி மாலை 14 வயது மாணவியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். எனினும் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய அவர், குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தலைமறைவான மற்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் சட்டம் ஒழுங்கு நிலவரம்குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தன.

அப்போது முதல்வர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்குமுதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “நான் ஒரு தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறீர்கள். அப்படியே இருந்துவிட்டு போகட்டும். தெற்கு அசாமை சேர்ந்தவர்கள் ஏன் வடக்கு அசாமுக்கு செல்கின்றனர்? இதன் மூலம் மியா முஸ்லிம்கள் அசாமை கைப்பற்ற முயற்சி செய்கின்றனரா? இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்