ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 15 பேர் கொண்ட திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடைபெறவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் கொண்ட திருத்தப்பட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி,செப். 25-ம் தேதி, அக். 1-ம் தேதி என மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலையில் பாஜக 44 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் 15 வேட்பாளர்கள் முதல் கட்டத் தேர்தலிலும், 10 வேட்பாளர்கள் 2வது கட்டத் தேர்தலிலும், 19 பேர் மூன்றாவது கட்டத் தேர்தலிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. திருத்தப்பட்ட பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

அந்தவகையில், தற்போது ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் கொண்ட திருத்தப்பட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை மட்டுமே அறிவிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தவறுதலாக 2 மற்றும் 3-ஆம் கட்ட தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர்கள் பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியானதால் அது வாபஸ் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வேட்பாளர்களும், தொகுதிகளும்: பாம்பூரில் இருந்து சையது சவுகர் அண்ட்ராபி, ராஜ்போராவில் இருந்து அர்ஷத் பட், சோபியானில் இருந்து ஜாவேத் கரி, அனந்தநாக் மேற்கில் இருந்து முகமது ரஃபீக் வானி, அனந்தநாகில் இருந்து சையது வசாஹத், பிஜ்பெஹாரில் இருந்து சோஃபி யூசுப், அனந்தநாக் கிழக்கில் இருந்து ஷங்குஸ், இந்தெர்வாலில் இருந்து தாரிக் கீன், கிஷ்த்வாரில் இருந்து சகுண் பரிஹார், பதேர் நசேனியில் இருந்து சுனில் சர்மா, பதர்வாவில் இருந்து தலீப் சிங் பரிஹார், டோடாவில் இருந்து கஜய் ரானா, ரம்பானில் இருந்து ராகேஷ் தாக்கூர், பனிஹாலில் இருந்து சலீம் பட் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிடிபி கட்சி 28 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும் , ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களிலும், கங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிடிபி - பாஜக இணைந்து ஆட்சி அமைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்