புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றங்கள் அரங்கேறியதாக பாஜக எம்.பி கங்கனா ரனாவத் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்வினை ஆற்றி உள்ளது.
தனியார் ஊடக நிறுவனத்துடனான நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார். “விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்க கூடும். அது சார்ந்த திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தனர்.
தேசத்தின் தலைமை வலுவாக இல்லாமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
நான் எப்போதும் பெண்களின் பாதுகாப்புக்கு குரல் கொடுப்பேன். அதில் நான் உறுதியாக உள்ளேன்” என கங்கனா தெரிவித்தார். இந்த சூழலில் கங்கனாவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் ராஜ்குமார் எதிர்வினை ஆற்றியுள்ளார். கங்கனா மீது பஞ்சாப் அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாஜக இது தொடர்பாக தெளிவான விளக்கம் தர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago