வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இரு நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களுடன் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்தது. வக்புவாரியத்தில் முஸ்லிம் பெண்களைசேர்ப்பது, முஸ்லிம் அல்லாதவர்களும் இடம் பெறலாம் என்பதுஉள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

‘‘சச்சார் கமிட்டி பரிந்துரைப்படி இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மாஃபியா கும்பலின் பிடியில் இருந்து வக்பு வாரிய சொத்துகளை மீட்பதே இதன் நோக்கம்’’ என்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு பரிந்துரை செய்தது.

பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து வருகிறது.

மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் சிராக் பாஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுஆகியோர் ஏற்கெனவே கேள்விஎழுப்பினர். ஆனால், தே.ஜ. கூட்ட ணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த மசோதாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது. இக்கட்சியின் எம்.பி. ராஜீவ் ரஞ்சன் இந்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலும் பேசினார்.

இந்நிலையில், பிஹார் முதல்வரும், ஐஜத கட்சித் தலைவரு மான நிதிஷ் குமாரை, மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான் சந்தித்து, வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த சட்டத் திருத்தம் குறித்து முஸ்லிம்கள் அச்சம் தெரிவிப்பதாக, முதல்வருக்கு நெருக்கமான நீர்வளத் துறை அமைச்சர் விஜயகுமார் சவுத்ரியும் கூறியுள்ளார். ஐஜத கட்சியின் இதர தலைவர்கள், எம்எல்ஏ குலாம் கவுஸ் உள்ளிட்டோரும் இதுதொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஐஜத செயல் தலைவர் சஞ்சய் ஜா, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான்ஆகியோர், மத்திய அமைச்சர்கிரிண் ரிஜிஜுவை சந்தித்து வக்புவாரிய சட்ட திருத்தத்துக்கு மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிஹாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கஉள்ளது. மாநில மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்