‘பனிப்பொழிவில் சிக்கிய ஆந்திராவை சேர்ந்த 66 பேரை மீட்க வேண்டும்’: உத்தராகண்ட் அரசுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை

By என்.மகேஷ் குமார்

உத்தராகண்ட் மாநிலம், பத்ரிநாத் பனிப் பொழிவில் சிக்கியுள்ள ஆந்திராவைச் சேர்ந்த 66 பேரை மீட்டு சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி உத்தராகண்ட் அரசுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 104 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். இவர்களில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 66 பேரும் அடங்குவர். இவர்கள் உத்தராகண்ட் மாநிலத்தில், மத்திய அரசின் 100 வேலை திட்டத்தை ஆய்வு செய்யச் சென்றனர். இந்நிலையில் இந்த 66 பேரும் கடும் பனிப் பொழிவில் சிக்கியுள்ளனர். உணவின்றி தவித்து வருவதாக உறவினர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

இதுபற்றி அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று உத்தராகண்ட் மாநில அரசுடன் பேசினார். அப்போது, பனிப் பொழிவில் சிக்கியுள்ள அனைவரையும் மீட்டு சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பத்ரிநாத் யாத்திரைக்குச் சென்ற ஆந்திராவை சேர்ந்த மற்ற 38 பேரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக உத்தராகண்ட் அரசு கூறியுள்ளது. மேலும் இவர்கள் 104 பேர் ஆந்திராவில் இருந்து பத்ரிநாத் சென்ற மேலும் சிலரும் பனிப்பொழிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்