புதுடெல்லி: ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் 14 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இதன்மூலம் அல்-காய்தா தீவிரவாத சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் அல்-காய்தா தீவிரவாத குழு செயல்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் அந்தந்த மாநில போலீஸார் உதவியுடன் டெல்லி போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 3 மாநிலங்களிலும் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து டெல்லி போலீஸார் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த டாக்டர் இஷ்தியாக் என்பவர் தலைமையில் இக்குழு செயல்பட்டு வந்தது. கிலாபத் பிரகடனம் செய்து நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை இக்குழு செயல்படுத்த விரும்பியது. இதன் உறுப்பினர்கள் ஆயுங்களை கையாளுவது உட்பட பல்வேறு பயிற்சிகளை பல்வேறு இடங்களில் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டியில் ஆயுதப் பயிற்சியின்போது 6 பேரும் ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு டெல்லி போலீஸார் கூறினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago