அனகாபல்லி: ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், அச்சுதாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையில் புதன்கிழமை மதியம் பாய்லர் வெடித்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 45-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக நிற்கும் எனவும், தைரியத்தை கைவிட வேண்டாம் எனவும் முதல்வர் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
காயமடைந்த 10 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடியும், படுகாயமடைந்துள்ளவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் நிதிஉதவி வழங்கப்படும். விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகால அலட்சிய போக்கே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம்.
தொழிற்சாலைகளில் நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் இதுபோன்று 119 சம்பவங்கள் நடந்துள்ளன. 120 பேர் உயிரிழந்துள்ளனர். இது யாருடைய அலட்சியம் என்பது இப்போது மக்களுக்கு புரியும். எங்கள் ஆட்சி வந்து வெறும் 60 நாட்களே ஆகியுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு பேசினார்.
பிரதமர் மோடி இரங்கல்: ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் மருந்து தொழிற்சாலை விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளம் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago