வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: மும்பையில் இருந்து பயணிகளுடன் திருவனந்தபுரம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மும்பை விமான நிலையத்திலிருந்து, ஏஐ 657 என்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் அதிகாலை 5.45 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சற்று நேரத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 135 பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக தெரிகிறது.

அந்த விமானம் தனிமைப்படுத்தப்பட்டது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்