காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: பட்டியலில் 90,000 முதல்முறை வாக்காளர்கள்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: நடைபெறவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 93,284 புதிய வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றவிருப்பதாக ஜம்மு காஷ்மீர் தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி,செப். 25-ம் தேதி, அக். 1-ம் தேதி என மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் தலைமை தேர்தல் அலுவலர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 93,284 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கு இணையாக இளம் மற்றும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 18 வயதிலிருந்து 29 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 34 ஆயிரமாகப் பதிவாகி உள்ளது. வாக்காளர் மக்கள்தொகை விகிதம் 0.59-லிருந்து 0.60 ஆக அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் 20 மாவட்டங்களிலும் புகைப்பட வாக்காளர்பட்டியல்களில் சிறப்பு சுருக்கதிருத்தம் கடந்த ஜூலை 1-ம் தேதிஅன்று நிறைவடைந்தது. திருத்தப்பட்ட பட்டியலை தயாரிக்கும்போது, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும் நடவடிக்கை மற்றும் துல்லியம் ஆகியவற்றை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி ஜம்மு காஷ்மீரில் மொத்தத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 88.03 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 43 லட்சத்து13 ஆயிரம் பெண்கள், 168 மூன்றாம்பாலினத்தவர், 44 லட்சத்து 89 ஆயிரம் ஆண்கள் உள்ளிட்டோர் அடங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர்தேர்தல் பணிகளுக்காக 298கம்பெனி துணை ராணுவப்படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகர், ஹந்த்வாரா, கந்தர்பால், புத்காம், குப்வாரா, பாரமுல்லா, பந்திபோரா, அனந்த்நாக், சோபியான், புல்வாமா, அவந்திபோரா மற்றும் குல்காம் ஆகிய இடங்களுக்கு கம்பெனி துணை ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை,எல்லை பாதுகாப்புப் படை, சஹஸ்த்ரா சீமா பால், இந்தோ - திபெத்திய எல்லை காவல் படை உள்ளிட்ட படைகளிடம் அமைதியான முறையில் தேர்தல் நடை பெறுவதை உறுதி செய்யும் பொறுப்புஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், நகர் அதிகபட்ச ராணுவப்படையினரைப் பெற்றுள்ளது (55).அதையடுத்து அனந்த்நாக் (50), குல்காம் (31), புத்காம், புல்வாமா மற்றும் அவந்திபோரா காவல் மாவட்டங்கள் (தலா 24), சோபியான் (22), குப்வாரா (20) , பாரமுல்லா (17), ஹந்த்வாரா 15, பந்திபோரா 13, மற்றும் கந்தர்பால் (3) என்கிற எண்ணிக்கையில் கம்பெனி துணை ராணுவப்படையினர் பிரிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்