ம.பி.யில் சிபிஐ சோதனை: நிலக்கரி சுரங்க அதிகாரிகள் வீட்டில் ரூ.3.8 கோடி பறிமுதல்

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேசத்தில் நிலக்கரி சுரங்க நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. இதில் ரூ.3.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தில் ‘நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்' (என்சிஎல்) என்ற பெயரில் நிலக்கரி சுரங்க நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ம.பி.யின் சிங்ராலி மாவட்டத்தில் இந்தநிறுவனத்தின் தலைவர் மற்றும்மேலாண் இயக்குநர், முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. மொத்தம் 25 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.3.8கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது: இந்த சோதனையில் என்சிஎல்தலைவரின் சுபேதார் ஓஜாவின்வீட்டில் இருந்து பெருமளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் என்சிஎல் நிறுவனத்திடம் இருந்து பலன்களைப் பெறுவதற்காக பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து திரட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக என்சிஎல் நிறுவனத்தின் 2 அதிகாரிகளையும் இடைத்தரகராக செயல்பட்ட சங்கம் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் உரிமையாளர் ரவி சங்கர் சிங் என்பவரையும் சிபிஐ கைது செய்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்