ஆந்திராவில் சமோசா சாப்பிட்ட ஆதரவற்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

அனகாபல்லி: கடையில் விற்ற சமோசாவை சாப்பிட்ட 27 ஆதரவற்றோர் பள்ளிமாணவ, மாணவியரில் சிகிச்சைபலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், அனகாபல்லி கைலாச பட்டினத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பள்ளிக்கு வெளியே விற்பனை செய்யப்பட்ட சமோசாவை மாணவ, மாணவிகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சமோசா சாப்பிட்ட 27 பேருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அனகாபல்லி அரசு மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஜோஷ்வா, பவானி, ஸ்ரத்தா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 24 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அனகாபல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாணவ, மாணவிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்திட வேண்டும் என்றும், இது தொடர்பாக மாவட்ட கல்வி நிர்வாகம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அனகாபல்லி மாவட்ட கல்வி அதிகாரி அப்பாராவ் நேற்று விசாரணையை தொடங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்