நீதிமன்ற சம்மனுக்கு தடை கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள மனு மீது, பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் டெல்லி அரசு வரும் 5-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரி கைக்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துகளை முறைகேடாக குத்த கைக்கு விட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் மீது சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த நில விவகாரத்தில் ரூ. 2000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து தாக்கல் செய்யப் பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா, சோனியா, ராகுல் ஆகிய இருவரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி, சோனியா, ராகுல் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி வி.பி.வைஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. சோனியா, ராகுல் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி, சம்மனுக்கு தடை விதிக்கும்படி கோரினர்.
தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு தொடர்ந்துள்ள சுப்ரமணிய சுவாமி மற்றும் டெல்லி அரசு வரும் 5-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட பின், சம்மனுக்கு தடை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அமலாக்கப் பிரிவு வழக்கு
இதனிடையே, ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை சொத்து விவகாரத்தில், சட்டவிரோத பணப் புழக்க தடைச் சட்டத்தின் கீழ், விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்பதையும், சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள், ஆவணங்கள் உண்மையா? என்று ஆராயவும், முதல்கட்ட விசாரணை வழக்கை அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது. இதில் உண்மை இருப்பது தெரியவந்தால், அடுத்தகட்டமாக சோனியா மற்றும் ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago