புதுடெல்லி: “78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பு,” என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கதத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “78-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தற்சார்பு, ஒரே நாடு-ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், மருத்துவக் கல்வி விரிவாக்கம், தொழில்துறை உற்பத்தி மற்றும் இந்தியாவில் வடிவமைப்பு மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற கருப்பொருள்களை எடுத்துரைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளின் வெற்றிகளால் ஈர்க்கப்பட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அவரது உறுதிப்பாட்டை பிரதிபலித்தது. இந்த உரையைக் கேட்டு, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் உரை, அடிவானத்தில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய பரந்த பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் சக்தியை இந்தியாவுக்கு ஏற்படுத்துகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், பாடத்திட்டங்களை திருத்துவதன் மூலம் சுய மாற்றத்துக்கான பயணத்தை இந்தியா வகுத்துள்ளது. இது குடிமக்களால் இயக்கப்படும் நிர்வாகத்துடன் கூடிய புதிய இந்தியா. 140 கோடி குடிமக்களும் நிச்சயமாக மகத்துவம், செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை அடைய முடியும் என்று உறுதியாக நம்பும் புதிய இந்தியா இது,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago