ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் ராம் மெக்வால் (40). மதுபோதைக்கு அடிமையான இவர், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் போதையில் இருந்த இவர் தனது மனைவியை தாக்கியுள்ளார். பிறகு அவரது கால்களை பைக்கில் கட்டி கரடுமுரடான மண் சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான வீடியோதற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வினாடிகள் ஓடும்அந்த வீடியோவில், அப்பெண் வலியால் அலறுவது தெரிகிறது. எனினும் கிராமத்தைச் சேர்ந்த எவரும் தங்கள் வீட்டை விட்டுவெளியே வரவில்லை. சம்பவத்தின்போது மற்றொரு பெண், வீடியோ எடுத்த ஆண் உள்ளிட்ட 3 பேர் அங்கு இருந்ததாக நம்பப்படும் நிலையில் அவர்களும் இதனை தடுக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், பிரேம் ராம் மெக்வாலை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். சம்பவத்தை தடுக்காமல் படம் பிடிப்பதில்ஆர்வம் காட்டியவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்பெண் தனது சகோதரி வீட்டுக்கு செல்ல விரும்பியதால் அவருக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்பெண்ணை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். அவர் நாகவுர்வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றுனர்.
இதற்கிடையில் அப்பெண்ணை 10 மாதங்களுக்கு முன் பிரேம் ராம் மெக்வால் ரூ.2 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உள்ளூர் போலீஸார்கூறும்போது, “அந்த கோணத்திலும் நாங்கள் விசாரிக்க உள்ளோம். அப்படி விலைக்கு வாங்கியிருந்தால் ஆட்கடத்தல் வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
» இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது: வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வேண்டுகோள்
» இந்தியாவின் மக்கள் தொகை 2036-ல் 152 கோடியாகும்: மத்திய புள்ளியியல் அமைச்சகம் தகவல்
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago