அகர்தலா: திரிபுராவில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற பஞ்சாயத்து தேர்த லில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
திரிபுராவில் கடந்த 8-ம் தேதி மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு 79.06 சதவீதமாக இருந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியாயின. மேற்கு திரிபரா மாவட்டத்தில் ஒன்றிரண்டு இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. துக்ளி ஊரக பகுதியில் திப்ரா மோதா கட்சி வென்றது.
மேற்கு திரிபுராவில் உள்ள 17 ஜில்லா பரிஷத்துக்கள், பஞ்சாயத்து சமிதிக்கள் மற்றும் பஞ்சாயத்து இடங்களிலும் பாஜகவேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதர மாவட்டங்களிலும் பாஜக வேட்பாளர்களே அதிகம் வென்றுள்ளனர். அம்பாசா மாவட்டத்தில் மட்டும் ஒரு சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
10,000 வேலைவாய்ப்புகள்: திரிபுராவில் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என மாநில முதல்வர் மாணிக் சாகா ஏற்கனவே நம்பிக்கைதெரிவித்திருந்தார். தேர்தல் முடிவடைந்ததும், 10,000 வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என திரிபுரா அரசு அறிவித்திருந்தது.
» இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது: வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வேண்டுகோள்
» இந்தியாவில் விற்கப்படும் சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
அதன்படி திரிபுரா காவல் துறை,திரிபுரா மாநில அரசு பணியாளர்தேர்வாணையம் போன்றவைவேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் மாணிக் சாகா உத்தர விட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago