டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் விவசாயிகளுக்கு குடை பிடித்த பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ராஜேந்திர பிரசாத் சாலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ஐசிஏஆர்) அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி கழகத்தில் சுமார் 1,250 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பண்ணை அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு புதிய வகை பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஐசிஏஆர் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 109 புதிய பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார்.

அப்போது ஐசிஏஆர் பண்ணை வளாகத்தை சுற்றிப்பார்த்த அவர், இயற்கைவேளாண்மை விவசாயிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளை வரவேற்கும் வகையில் சாரல் மழை பெய்தது. அங்கிருந்த அதிகாரிகள், பிரதமர் நனையாமல் இருக்க ஓடோடிச் சென்று குடையை எடுத்து வந்தனர்.

அதிகாரிகளிடம் இருந்து அவசரமாக குடையை வாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் நனையாமல் இருக்க அவர்களுக்கு குடை பிடித்தார். பிரதமரின் எளிமை, மனிதாபிமானத்தை பார்த்து விவசாயிகள், வேளாண் அதிகாரிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

வீடியோ வைரல்: பிரதமர் நரேந்திர மோடிவெளிநாடுகளுக்கு சென்றிருந்தபோது அந்த நாடுகளின் அதிபர்கள், அவருக்கு குடைபிடித்த சம்பவங்கள் பலமுறை அரங்கேறி உள்ளன. ஆனால்அவர் நாட்டு மக்களுக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு குடை பிடித்து புதியமுன்னுதாரணத்தை ஏற்படுத்திஉள்ளார். இந்த புகைப்படம்,வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்