பஞ்சாப் வெள்ளத்தில் கார் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சண்டிகர்: இமாச்சல பிரதேசத்தின் டெஹ்லான், படோலி கிராமங்களை சேர்ந்த 3 குடும்பத்தினர் பஞ்சாபின் ஜெய்ஜோன் கிராமத்தில் உள்ள உறவினர் திருமண விழாவில் பங்கேற்க நேற்று வாடகை காரில் சென்றனர். அந்த காரில் ஓட்டுநர் உட்பட 12 பேர் பயணம் செய்தனர்.

இமாச்சல பிரதேசம், பஞ்சாபில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பஞ்சாபின் ஜெய்ஜோன் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்து கொண்டிருந்தது. அந்த தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது கார் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் ஓட்டுநர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தீபக் என்ற இளைஞர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ஜெய்ஜோன் தரைபாலத்தை கடக்க வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் எச்சரித்து உள்ளனர். ஆனால் திருமண விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசையில் தரைபாலத்தை காரில் கடக்க முயற்சி செய்துள்ளனர். இதில் கார் வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 மீட்டர் தொலைவு வரை இழுத்துச் செல்லப்பட்டு உள்ளது.

ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். சிறுமி உட்பட 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். விபத்து நேரிட்ட இடம் பஞ்சாப் எல்லைக்கு உட்பட்டது. எனினும் இமாச்சல பிரதேச போலீஸார், அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்