இம்பால்: மணிப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் மனைவி உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலத்தின் சாய்க்குல் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ.,வாக இருந்தவர் யம்தோங் ஹாவோகிப் (64). பின்னர் பாஜக கட்சிக்கு தாவினார்.
இவர் காங்போக்பி மாவட்டத்தில் குகி மற்றும் ஜோமி இனத்தவர் அதிகம் வசிக்கும் எகோ முலாம் என்ற பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி சாருபாலா (59) மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்.
இவர்களது வீட்டில் கடந்த சனிக்கிழமை 3 மணியளவில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தபோது அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் சாருபாலா இறந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் வேறு யாரும் காயம் அடையவில்லை. இச்சம்பவம் தற்செயலாக நடந்ததா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக நடந்ததா என பல கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
46 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago