பெங்களூரு லால்பாக் மலர் கண்காட்சியில் அம்பேத்கர் சாதனைகளுக்கு பார்வையாளர்களிடம் வரவேற்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக அரசின் தோட்டக் கலைத்துறையின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூரு லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை தொடங்கிய இந்த கண்காட்சி வருகிற 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு ‘‘பாபசாகேப் அம்பேத்கர்-வாழ்வும் சாதனையும்" என்ற தலைப்பில் ஒரு கோடி மலர்களையும், 5 லட்சம் பூ தொட்டிகளையும் கொண்டு வண்ணமயமான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பேத்கர் பங்களிப்பு செய்த நாடாளுமன்ற கட்டிடம், இந்திய அரசியலமைப்பு சட்டம், ரிசர்வ்வங்கி, தேசிய கொடி, தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம், பவுத்த மதம் தழுவல் உள்ளிட்டவை மலர்களாலேயே உருவாக்கப்பட்டுஉள்ளன.

அம்பேத்கர், புத்தர், ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி 12 நாட்கள் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE