புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற பிறந்தநாள் விழா ஒன்றில் திஹார் சிறையின் ஜெயிலர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் ஆடிய காணொலி வெளியாகி வைரலானது.
சம்மந்தப்பட்ட காணொலியில், டெல்லி திஹார் சிறை ஜெயிலர்களில் ஒருவரான தீபக் சர்மா, கைத்துப்பாக்கியுடன் ஆடியுள்ளார். இவருடன் சேர்ந்து மேலும் இருவர் ஆடும் காட்சிப் பதிவாகி உள்ளது. இந்த ஆட்டம், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்தின் ‘கல் நாயக்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாயக் நஹின் கல்நாயக் ஹும் மேன்...’ எனும் பாடலுக்காக இருந்தது.
இந்த காட்சிப்பதிவை இணைத்து திஹார் சிறை நிர்வாகம் சார்பில் ஏஎஸ்பி தீபக் சர்மா மீதுநடவடிக்கை எடுக்கும்படி டெல்லிகாவல்துறைக்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து ஜெயிலர்தீபக் சர்மா மீது வழக்குகள்பதிவாகி அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் ஜெயிலர் தீபக் சர்மா ஆடியது, டெல்லி சீமாபுரியில் நடைபெற்ற ஒரு பாஜக பெண் கவுன்சிலரது கணவரின் பிறந்தநாள் விழா என்பது தெரியவந்துள்ளது. ஆட்டத்துக்கு இடையில் ஏஎஸ்பி தீபக் சர்மா, தன் கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனை விசாரித்து வரும் டெல்லி போலீஸார், அவர் பயன்படுத்தியது அவருக்கான காவல்துறையின் கைத்துப்பாக்கியா எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.
தனது உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்கும் ஏஎஸ்பி தீபக் சர்மா, சமூகவலைத்தளங்களில் பிரபலம். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4.4 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதில் தனது உடற்பயிற்சி படம், காணொலிகளை அடிக்கடி பதிவிடுகிறார். சர்ச்சைகளும் இவருக்கு புதிதல்ல. முன்னதாக, தமிழ்நாட்டை சேர்ந்தகைதி சுகேஷ் சந்திரசேகருடனான சர்ச்சையிலும் தீபக் சர்மா சிக்கியிருந்தார். இதில், தம்மை பாலிவுட் படங்களில் கதாநாயகனாக நடிக்கவைக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தினார் என்றும், உடற்பயிற்சிக்காகத் தம்மிடம் ரூ.30 லட்சங்களை மிரட்டி அதிகாரி தீபக் சர்மா வாங்கியதாகவும் சுகேஷ் புகார் கூறி இருந்தார்.
திஹார் சிறையின் வேறு சிலகைதிகளும் அதிகாரி தீபக் சர்மா மீதுஏற்கெனவே புகார் அளித்திருந்தனர். தற்போது இந்த புகார்களும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு உள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago