புதுடெல்லி: வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது:
வங்கதேசத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தோ-வங்கதேச எல்லையில் தற்போதைய நிலைமையை கண்காணிப்பது, வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளுடன் இந்த குழு தொடர்பில் இருக்கும்.
ஏடிஜி தலைமையில் செயல்படும் இந்த குழுவில், எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), கிழக்குக் கட்டளை தலைமை ஐஜி, பிஎஸ்எப் தெற்கு வங்கம் எல்லைப்புற தலைமையகம் , பிஎஸ்எப் திரிபுரா எல்லைப்புற தலைமையகம், இந்திய நில துறைமுக ஆணையம் (எல்பிஏஐ) ஆகியவை உறுப்பினர்களாக இருக்கும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையி்ல், வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முகமது யூனுஸ் கூறும்போது, “சட்டம் ஒழுங்குதான் எங்களின் முதல் பணி. சட்டம் ஒழுங்கை சரிசெய்யாவிட்டால் ஒரு அடி கூடமுன்னேற முடியாது. உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், நாட்டில் யாருக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நபரும் நமது சகோதரர்கள். அவர்களைப் பாதுகாப்பதே எங்களின் தற்போதைய முக்கிய பணி’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago