நிஜாமாபாத்: தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகராட்சி வருவாய் துறை அதிகாரி நரேந்தர் வீட்டில் நேற்றுலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி ரூ.6.07 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், பத்திரங்களை பறிமுதல் செய்தனர்.
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகராட்சியில் வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் நரேந்தர். இவர் லஞ்சபணத்தில் அதிக சொத்துகளை சேர்த்துள்ளதாக புகார்கள் வந்தன.
இது குறித்து நிஜாமாபாத் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை நரேந்தர் வீட்டிலும், நிஜாமாபாத் நகராட்சி அலுவலகத்திலும், நரேந்தரின் உறவினர்கள் வீடுகளிலும் ஒரேநேரத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வருவாய்க்கு அதிகமாக இவர் சொத்துகள் சேர்த்துள்ள விவரம் தெரிய வந்தது.
நரேந்தரின் வீட்டில் ரூ.2.93 கோடி ரொக்கம், ரூ.1.98 கோடிமதிப்புள்ள 17 வீட்டு மனைப்பட்டாக்கள் அவரது மனைவியின் வங்கி கணக்கில் ரூ.1.10 கோடியும், லாக்கரில் தங்க நகைகளையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நரேந்தரை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருவதாக நிஜாமாபாத் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சேகர் கவுட் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago