பவன் கல்யாணின் கோரிக்கையை ஏற்று 8 கும்கி யானைகளை ஆந்திரா அனுப்பிய சித்தராமையா

By இரா.வினோத்


பெங்களூரு: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று பெங்களூரு வந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே ஆகியோரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், ‘‘ஆந்திராவில் சித்தூர், பார்வதிபுரம் மன்யம் உள்ளிட்ட மாவட்டங்களில் யானைகள் ஊருக்குள் நுழைகின்றன. இதனை தடுக்க கர்நாடக அரசு8 கும்கி யானைகளை ஆந்திராவுக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பமுடியும். மேலும் மனித உயிர்களுக்கு ஆபத்து நேர்வதையும் தடுக்க முடியும்'' என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘‘கர்நாடகாவின் முகாம்களில் 100-க்கும்மேற்பட்ட யானைகள் இருக்கின்றன. அவற்றில் 62 யானைகளை காட்டு யானைகளை அடக்கவும், விலங்குகள் மற்றும் மனிதர்களை பாதுகாக்கவும் கும்கி யானைகளாக மாற்றியுள்ளோம்.

அதில் 12 கும்கி யானைகளை உத்தர பிரதேசத்துக்கும், தலா6 கும்கி யானைகளை சத்தீஸ்கர்,மகாராஷ்டிராவுக்கும் அனுப்பியுள்ளோம். ஆந்திர அரசின் கோரிக்கையை ஏற்று 8 கும்கி யானைகளை அங்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம். அதன் மூலம் அங்குமனிதர்கள் மற்றும் வன விலங்குகளுக்கு இடையேயான மோதல் தடுக்கப்படும்''என தெரிவித்தார்.

இதற்கு பவன் கல்யாண், ‘‘ஆந்திர மாநில மக்களின் சார்பாககர்நாடகாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE