6 ஆண்டில் வேலைவாய்ப்பு 35% உயர்வு: பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்தியபொருளாதார வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.

பங்குச் சந்தை, வேலைவாய்ப்பு, எம்எஸ்எம்இ, வாகன விற்பனை, ஏற்றுமதி, அந்நிய நேரடி முதலீடு, வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் என இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான விவரங்களை பிரதமர் மோடி நமோசெயலி மூலம் நேற்று முன்தினம்நியூஸ்லெட்டராக வெளியிட் டுள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கியபுள்ளிவிவரங்கள்:

# இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு 5.5 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.

# கடந்த 6 நிதி ஆண்டுகளில் இந்தியாவில் வேலைவாய்ப்பு 35 சதவீதம் உயர்ந்து 64.33 கோடியாக உள்ளது.

# எம்எஸ்எம்இ துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 20.5 கோடிவேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. மொத்தமுள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களில் 39 சதவீதம் பெண்களால் நடத்தப்படுபவை.

# 1.4 லட்சம் ஸ்டார்ட் அப் மூலம் 15.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

# வாகன விற்பனை நடப்பு நிதிஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன்வரையிலான முதல் காலாண்டில் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. 62 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

# முதல் காலாண்டில் ஏற்றுமதி 5.5 சதவீதம் உயர்ந்து 21.2 பில்லியன் டாலராக உள்ளது.

# முதல் காலாண்டில் யுபிஐ மூலம் ரூ.60 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 36% அதிகம் ஆகும்.

# இந்தியாவிலிருந்து ஐபோன் ஏற்றுமதி முதல் காலாண்டில் 3.8 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது.

# நிதிப் பற்றாக்குறை மே மாதத்தில் 20.98 பில்லியன் டாலராக இருந்த நிலையில் ஜூன் மாதத்தில் 23.78 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

# நடப்பு ஆண்டில் இதுவரையில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் ரூ.30,772 கோடி முதலீடு செய்துள்ளனர்.

# இந்தியாவுக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டுஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் 40.72 லட்சமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிட இது 9 சதவீதம் அதிகம் ஆகும்.

# 2023 -24 நிதி ஆண்டுக்கு 6 கோடி ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 70 சதவீதம் புதிய வரிமுறைக்குக்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE