ஆந்திர எல்லைப்பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி, அதனை, ஆந்திரா, தமிழகத்தில் விற்கும் கும்பலை பிடிக்க முயன்ற கலால் துறை போலீஸார் மீது, கள்ளச்சாராய கும்பல் தாக்குதல் நடத்தியதில், இன்ஸ்பெக்டர் உட்பட காவலர்கள், பெண் காவலர்கள் என 6 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழக-ஆந்திர எல்லையில், சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம், ராசனபள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சி, அதனை லாரி, பஸ் டியூப்களில் அடைத்து, அவைகளை ரயில், பஸ் மூலம் தமிழகத்திற்கும், ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்திலும் சட்டவிரோதமாக விற்று வருகின்றனர். இதுகுறித்து பலமுறை கலால் துறை போலீஸார் நடவடிக்கை எடுத்தும் சாராயம் காய்ச்சி விற்பதை இந்த கும்பல் கைவிடவில்லை.
ராசனபள்ளியில் போலீஸார் செல்லவே அச்சப்படும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில், ராசனபள்ளியில் சாராயம் காய்ச்சுவதை முழுவதுமாக நிறுத்த சித்தூர் எஸ்.பி ராஜசேகர் பாபு உத்தரவின்பேரில், கலால் துறை போலீஸார் செவ்வாய்கிழமை இரவு அதிரடியாக ராசனபள்ளியில் நுழைந்து சாராயம் காய்ச்சும் பானைகளை அடித்து நொறுக்க முயற்சித்தனர்.
இதனைக் கண்டு, கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல், கலால் துறையினர் மீது, உருட்டு கட்டை மற்றும் கற்களால் பயங்கரமாக தாக்குதல் நடத்தினர். இதில் கலால் துறை இன்ஸ்பெக்டர் உட்பட காவலர்கள், 2 பெண் காவலர்கள் என மொத்தம் 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு குடிபாலாவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் இவர்கள் சித்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக 8 பேர் மீது குடிபாலா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago