புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது.
கைது செய்யப்பட்ட கேஜ்ரிவால்திகார் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக அர்விந்த் கேஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. இதைத் தொடர்ந்து கேஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வருகிறார்.
அமலாக்கத்துறை வழக்கில் இந்நிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கேஜ்ரிவாலுக்கு கடந்தஜூலை 12-ம் தேதி உச்ச நீதிமன்றம்ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கு காரணமாக, கேஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் உள்ளார்.
இதையடுத்து, சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து, இடைக்கால ஜாமீன் கோரிய மனு மீதுநேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா கூறும்போது, “எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் கேஜ்ரி வாலை, சிபிஐ கைது செய்ததாக கூற முடியாது’’ என்று கூறி கேஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், ஜாமீன் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை கேஜ்ரிவால் நாடலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago