புதுடெல்லி: மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18% ஜிஎஸ்டியை குறைக்குமாறு மத்திய அரசை, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய டெரெக் ஓ பிரையன், “மருத்துவம் மற்றும் சுகாதார காப்பீடு மீதான 18% ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். இது மக்களுக்கு, முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினருக்கு சுமையாக இருக்கும் பிரச்சினை. சர்வதேச அளவில் மருத்துவக் காப்பீடு 7% க்கும் அதிகமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது 4% க்கும் குறைவாக உள்ளது.
பொதுவாக எங்கள் (எதிர்க்கட்சிகள்) பேச்சை கேட்க மாட்டார்கள். இதே விவகாரத்தை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். குறைந்தபட்சம் அவரது பேச்சையாவது இவர்கள் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜூலை 28ம் தேதி கடிதம் எழுதி இருந்தார். அவர் தனது கடிதத்தில், "நாக்பூர் டிவிஷனல் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், காப்பீட்டுத் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒரு குறிப்பாணையை என்னிடம் அளித்துள்ளனர். அவர்கள் எழுப்பிய முக்கிய பிரச்சினை, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது தொடர்பானது.
» டெல்லி மாநகராட்சிக்கு 10 நிபுணர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு: உச்ச நீதிமன்றம்
» வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு, தமிழகத்தில் குறைவு: மக்களவையில் தகவல்
ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் இரண்டுக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்கு சமம்.
வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை எனும் அபாயத்தை உணர்ந்த ஒரு நபர், இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு தனது குடும்பத்திற்கு சில பாதுகாப்பை வழங்குவதற்காக எடுக்கும் காப்பீடுக்கான பிரீமியத்திற்கு வரி விதிக்கப்படக்கூடாது என ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் கருதுகிறது.
அதேபோல், மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு சிரமமாக இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவதற்கான எனது ஆலோசனையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலியுங்கள்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago