மூன்றாம் உலகப் போர் இன்று தொடங்கும்: இந்திய ஜோதிடர் கணிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுவர் ஜோதிடர் குஷால் குமார். எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து கூறி வருகிறார். அந்த வகையில் இவர். இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர், ரஷ்யா, உக்ரைன் இடை யிலான போரை முன்கூட்டியே கணித்துள்ளார். புவிசார் அரசியல் நிகழ்வுகள் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய மோதலைத் தூண்டும் என்று குஷால் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 4 அல்லது 5-ம் தேதி (இன்று) 3-ம் உலகப் போர் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த வாரம் ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்றும் பழிவாங்குவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ள நிலையில்தான் குஷால் குமார் இவ்வாறு கணித்துள்ளார்.

அதேநேரம், இதற்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கும் என இவர் பல முறை கணித்திருந்த போதும் அது நடக்கவில்லை. கடந்த ஜூன் 18-ம் தேதி மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என கணித்தார். ஆனால் போர் தொடங்கவில்லை. பின்னர் ஜூலை 26 அல்லது 28-ம் தேதி போர் தொடங்கும் என்றார். அதுவும் பொய்த்துப் போனது. இப்போதைய கணிப்பாவது பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்