வயநாடு நிலச்சரிவு பகுதியில் வீடுகளில் கொள்ளை: போலீஸார் தீவிர ரோந்து

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கியுள்ள நிலையில் அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, சூரல்மலை மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதியில் கடந்த வாரம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர். பலர் வீடுகளை பூட்டி விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், யாரும் இல்லாத வீடுகளில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நிலச்சரிவு காரணமாக பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியேறினோம். பின்னர் வீட்டுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்" என்றார்.

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில். சூரல்மலை. முண்டக்கை உள்ளிட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியிலோ அல்லது வீடுகளிலோ இரவு நேரங்களில் மீட்புப் பணி என்ற பெயரில் போலீஸார் அனுமதி இன்றி யாரும் நுழையக் கூடாது. மீறி அங்கு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE