புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம், ரூ.50,655 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, ரூ.50,655 கோடி முதலீட்டில் 936 கிமீ அளவுக்கு 8 தேசிய வேக சாலைகள் அமைக்கப்பட உள்ளன. 9 மாநிலங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டங்களால், பயண நேரம் பாதியாக குறையும் என்றும் 4.4 கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தேசிய நெடுஞ்சாலை தொடர்பான 8 திட்டங்களுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய தாக்கம் செலுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாசிக் பாடா - கேட் இடையே எட்டு வழிச் சாலையும், ஆக்ரா -குவாலியர் இடையே 88 கிமீ, தரத்-தீசா-மெஹ்சானா - அகமதாபாத் இடையே 214 கிமீ தூரத்துக்கு ஆறு வழிச் சாலைகளும், காரக்பூர்-மோர்கிராம் இடையே 231 கிமீ, அயோத்தியில் 68 கிமீ, ராய்ப்பூர் - ராஞ்சி காரிடோவின் அதல்கான் - கும்லா இடையே 137 கிமீ தூரத்துக்கு நான்கு வழிச் சாலைகளும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago