டிக்கெட்டில் குறிப்பிடும் நேரத்தில் திருமலைக்கு வந்தால் போதும்: தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்

By என்.மகேஷ்குமார்


திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் நிறை, குறைகளை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் கேட்டறிந்தார். அப்போது 33 பக்தர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சியாமள ராவ் கூறியதாவது:

சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, ஒருவாரத்தில் 1.05 லட்சம் பக்தர்களுக்குசர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது 1.47 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 1,000 மட்டுமே வழங்கப்படுகிறது. இதில்100 டிக்கெட்டுகள் திருப்பதி விமானநிலையம் வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

திருமலைக்கு பக்தர்கள் தரிசன டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள நேரத்துக்கு வந்தால் போதுமானது. அதுவரை திருப்பதி நகரிலும் மற்றும் நகரை சுற்றிலும் உள்ள பல்வேறு திருத்தலங்களை பக்தர்களை தரிசிக்கலாம்.

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் இந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதத்தில் ஏழுமலையானை 22.13 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 8.67 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். உண்டியலில் காணிக்கையாக ரூ.125.35 கோடி செலுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்