யுபிஎஸ்சி தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக மனோஜ் சோனி இருந்தார். இவரது பதவிக் காலம் 2029-ல் தான் முடிகிறது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதனை, யுபிஎஸ்சி தலைவராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்துள்ளார். இவர் யுபிஎஸ்சி தலைவராக இன்று பொறுப்பேற்கிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் யுபிஎஸ்சி உறுப்பினராக இருந்தார். தற்போது அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு 2025 ஏப்ரல் மாதம் 65 வயது நிறைவடைகிறது. அதுவரை இவர் பதவியில் இருப்பார். அரசியல் சாசனத்தின் 316 ஏ பிரிவின்படி அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் மத்திய அரசு பணியில் 37 ஆண்டு அனுபவம் மிக்கவர். உலக வங்கியின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE