புதுடெல்லி: தமிழகத்தின் கல்பாக்கத்தில் அமைக்கப் பட்டுள்ள நாட்டின் மிக மேம்பட்ட அணு உலை திட்ட செயல்பாட்டுக்கு அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏஇஆர்பி) ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து ஏஇஆர்பி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் அணு சக்தி திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக தமிழகத்தின் கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 எம்டபிள்யூஇ சோடியம் - குளிரூட்டப்பட்ட முன்மாதிரி வேகப் பெருக்கி உலையை (பிஎப்பிஆர்) இயக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ரஷ்யாவுக்கு அடுத்தபடி யாக வணிக ரீதியாக செயல்படும் இவ்வகை விரைவு அணு உலையை கொண்டிருக்கும் இரண்டாவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் விரிவான சோதனைகளுக்குப் பிறகே சோடியம்-குளிரூட்டு அதிவேக அணு உலை செயல்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த மதிப்பாய்வை ஒழுங்குமுறை வாரியம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்.
» பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
» யுபிஎஸ்சி தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் நியமனம்
இவ்வாறு ஏஇஆர்பி தெரிவித்துள்ளது.
கல்பாக்கத்தில் 500 எம்டபிள்யூஇ சோடியம் குளிரூட்டப்பட்ட அதிவேக அணு உலையானது பவினி நிறுவனத்தால் நிறுவப்பட்டது. அணுசக்தி திட்டத்தில்இது ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
இந்த அணு உலையை கட்டமைப் பதற்கு சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் உள்ளூர் நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago